நேபாளத்தில் நிலநடுக்கம்: டெல்லி, உத்தரகாண்டில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல்

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின.

நேபாளத்தின் சிலங்கா நகரின் அருகில் பத்து அடி ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 4 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு அண்டை நகரங்களில் அதிர்வுகள் ஏற்பட்டன.

டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. உயிர்ச்சேதம் அல்லது உடைமைகள் சேதம் குறித்த உடனடியான தகவல் இல்லை. ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.முந்தைய நிலநடுக்கத்தால் ஆறு பேர் உயிரிழந்தனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.