உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி 35 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். ஏறத்தாழ இந்த பிக்பாஸ் சீசன் பாதி நெருங்கிவிட்டதால், யார் வைல்டு கார்டு என்டிரி? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த சீசனில் ஏற்கனவே கலந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்து மீண்டும் களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால், அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால், மீண்டும் அவரை அழைக்க பிக்பாஸ் தயாராக இல்லையாம்.
அசல் கோலாறும் வைல்டு கார்டு என்டிரியாக செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரை களமிறக்காமல் புதுமுகங்களை களமிறக்க பிக்பாஸ் டீம் முடிவு செய்திருக்கிறதாம். பல்வேறு பிரபலங்களிடம் இது குறித்து பிக்பாஸ் டீம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அந்த வகையில் இந்த சீசனில் முதலாவது வைல்டு கார்டு போட்டியாளராக பிரபல விஜே பார்வது எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரையைச் சேர்ந்த பார்வதி, கடந்த ஆண்டு நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
விஜய் தொலைக்காட்சியின் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார். அண்மையில் வையநாடு சென்றிருந்த பார்வதி லேட்டஸ்ட் போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டிருந்தார். அதில் கமெண்ட் அடித்த நெட்டிசன்கள், நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு என்டிரியாக போகலாமே? என கேட்டனர். ஏற்கனவே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் அந்த நிகழ்ச்சியில் நீங்கள் வைல்டு கார்டு என்டிரியாக களமிறங்கினால், தகராறுகளுக்கு பஞ்சமே இருக்காது என கமெண்ட் அடித்திருக்கின்றனர். இதனை பிக்பாஸ் டீமும் மோப்பம் பிடித்திருக்கிறதாம்.