சென்னை எம்.கே.பி.நகர் பகுதியில்
நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட கட்சியின் பொருளாளரான
மணமக்களை வாழ்த்தினார. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக மழை பெய்துள்ளதாக தெரிகிறது. சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. விவசாய பூமி அங்கு நெற்பயிர்கள் எல்லாம் மழை நீரில் மூழ்கி போய் உள்ளதை அறிந்து மனம் வேதனை அடைகிறது.
மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் ராட்சத மோட்டார்களை வைத்து நீரை வெளியேற்றுவது, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து நிறைவேற்றுவது என தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
தேமுதிகவின் ஆணிவேர்களான கட்சித் தொண்டர்கள், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என்று பிரேதலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.