சென்னை: மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறப்பட்டார். புதுச்சேரி சென்று இரவு தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை கடலூர், சீர்காழி, சிதம்பரத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.