தமிழகத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆய்வுக்கூடத்தில் ரேஷன் கடைகளில் உள்ள 6053 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் காலியாக உள்ள 5,578 விற்பனையாளர்கள் மற்றும் 925 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.
எனவே ரேஷன் கடையில் வேலையில் சேர விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள்.
காலி பணியிடங்கள் : 6503
கல்வித் தகுதி : விற்பனையாளர்கள் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10ம் வகுப்பத் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : விற்பனையாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.150 மற்றும் கட்டுநர் விண்ணப்பக் கட்டணம் ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை : https://www.drbobo.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 14ஆம் தேதி கடைசி நாளாகும்.