ரொனால்டோ இன்னும் தனக்கு வாழ்த்து கூறவில்லை என பென்சிமா வருத்தம் தெரிவித்துள்ளார்
உலகக்கோப்பையை வெல்வது எனது சிறந்த பிறந்த நாள் பரிசுகளில் ஒன்றாக இருக்கும் என பென்சிமா கூறியுள்ளார்
கால்பந்து விளையாட்டின் உயரிய விருதான Ballon d’Or-ஐ பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கரிம் பென்சிமா சமீபத்தில் பெற்றார்.
அவர் முதல் முறையாக இந்த விருதை வென்றுள்ளார். லா லிகா மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களை ரியல் மாட்ரிட் வெல்ல உதவியதற்காக பென்சிமாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது.
பிரெஞ்சு கால்பந்து வரலாற்றில் சிறந்த ஸ்ட்ரைக்கர் பென்சிமா தான் என பிரான்ஸ் அணியின் மேலாளர் ஜினேடின் ஜிடனே புகழ்ந்துள்ளார்.
(Photo by FRANCK FIFE/AFP via Getty Images)
ஆனால், ரியல் மாட்ரிட் அணியில் தன்னுடன் 9 ஆண்டுகள் இணைந்து விளையாடிய ரொனால்டோ இதுவரை தனது வாழ்த்து கூறவில்லை என பென்சிமா வருத்தம் தெரிவித்துள்ளார்.
எனினும், உலகக்கோப்பையை வெல்வதிலேயே தற்போது தனது கவனம் இருப்பதாக கூறும் பென்சிமா, உடல் ரீதியாக சிறிய பிரச்சனைகள் இருந்தாலும் போட்டிக்கு முன் தயாராகி விடுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Jose Breton/Pics Action/NurPhoto/Reuters
Ballon d’Or விருதை ஐந்து முறை கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.