2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பிற்பகல் 1.30 இற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தியாகியிருப்பதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பிப்பார்.
வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும். இதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறும். வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகும். அதன் வாக்கெடுப்பு அடுத்த மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை, வரவு செலவுத்திட்டம் சம்ரப்பிக்கப்படும் நாளைய தினம் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும். இராஜதந்திரிகள் மாத்திரம் அன்றைய தினத்தில் பொதுமக்கள் கலரிக்கு அனுமதிக்கப்படுவார்கள். பாராளுமன்ற வாகனத் தரிப்பிடம் குறித்த தினத்தில் மூடப்பட்டிருக்கும். அத்துடன் பொலிஸ் போக்குவரத்தப் பிரிவு விசேட போக்குவரத்து ஒழுங்குகளை நாளை முன்னெடுக்கும்.