பிஜிங்,
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ தலைமையில், விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ரஷியா உட்பட பல நாடுகள் இணைந்து இந்த ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இந்நிலையில், சீனா, விண்வெளியில் தனக்கென தனியாக ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான பொருட்களை சீனா ஏற்கனவே அனுப்பி வைத்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆய்வு மையத்துக்குதேவையான பொருட்களுடன் கூடிய சரக்கு விண்கலம் நேற்று ஏவப்பட்டது.
வென்சாங் விண்கல ஏவுதளத்தில் இருந்து, லாங் மார்ச்-7 ராக்கெட் மூலம் விண்கலம் செலுத்தப்பட்டது. 10 நிமிடங்களிலேயெ விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சுற்றுப்பாதையை அடைந்ததாக சீன விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துஉள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள், சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையம் அடுத்த சில ஆண்டுகளில் தன் ஆயுட்காலத்தை நிறைவு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.