அமெரிக்காவின் டல்லாஸ் விமான சாகசக் காட்சியின் போது இரண்டு போர் விமானங்கள் மோதிக் கொண்டு கீழே விழுந்து தீப்பிடித்தன. இந்த காட்சி பார்வையாளர்களின் கேமராவில் பதிவாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமாநத்தில் ஒன்று பி 17 என்ற குண்டுமழை பொழியக்கூடிய போர் விமானமாகும். தரையில் இருந்து அதிக உயரம் பறக்காமல் நேர்க்கோட்டில் இரண்டு விமானங்கள் அரைவட்டம் போட்டு பறந்த போது சிறிய விமானம் பி 17 விமானம் மீது வந்து மோதி விட்டது
கீழே விழுந்த சில நொடிகளில் இரண்டு விமானங்களும் தீப்பிடித்து எரிந்தன. விமான ஓட்டிகள் நிலைமை பற்றி அதிகாரிகள் தகவல் எதையும் வெளியிடவில்லை.