2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திரை நட்சத்திரங்களின் 80-ஸ் ரீயூனியன்; வைரலாகும் புகைப்படங்கள்!

1980களில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் ’80ஸ் ரீயூனியன்’ என்ற பெயரில் சந்தித்து  தங்கள் நட்பை கொண்டாடி வருகின்றனர். ’80ஸ் ரீயூனியன்’ என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை 2019-ல்  சிரஞ்சீவி தனது ஹைதராபாத் இல்லத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியில் பங்குப்பெற்ற அனைவரின் நெஞ்சங்களிலும் அவை நீங்காத நினைவாக இடம்பெற்றது. 

இதனைத்தொடர்ந்து, அடுத்த வருட நிகழ்ச்சிக்கு அனைவரும் காத்திருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ’80ஸ் ரீயூனியன்’ நடைபெறவில்லை. 

தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள்

இந்நிலையில், மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு மும்பையில் அனைவரும் சந்தித்துக் கொண்டனர். பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர். பாலிவுட்டை சேர்ந்த தங்கள் நண்பர்கள் சிலரையும் சனிக்கிழமை (நவம்பர் 12) மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். 

ஒவ்வொரு ஆண்டும் ஆடைகளுக்கு என்று சில குறிப்பிட்ட வண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பெண்களுக்கு வெள்ளி மற்றும் ஆரஞ்சு நிறங்களும் ஆண்களுக்கு சாம்பல் மற்றும் ஆரஞ்சு நிறங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள்

நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் மேற்கண்ட வண்ணங்களில் அரங்கைத் தயார் செய்து தங்கள் விருந்தினர்களை வரவேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர், நடிகைகள் சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி, மது உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். நட்பு, தோழமை, வேடிக்கை நிறைந்த மாலைப் பொழுதாக இந்த ரீயூனியன் அவர்களுக்கு அமைந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.