2022 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
8-வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ஆம் திகதி ஆரம்பமானது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ‘சூப்பர் 12’ சுற்றுடன் வெளியேறியது. முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் உலகக்கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மெல்போர்னில் இன்று (13) நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய வுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி அணி கள தடுப்பில் ஈடுபட்டது.பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரிஷ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் சிறப்பாக விளையாடியபோது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். .
29 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரிஸ்வான் 15 ஓட்டங்களில் ,சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷான் மசூத் அதிரடி காட்டினார்.மறுபுறம் நிலைத்து ஆடி ஓட்டங்கள் குவித்த பாபர் அசாம் 32 ஓட்டங்களில் வெளியேறினார்.ரிஷ்வான் 15 ஓட்டங்களிலும், பாபர் அசாம் 32 ரஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஷான் மசூத் 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.