5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை:
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 5 ஆயிரத்து 399 கன அடியில் இருந்து 8 ஆயிரத்து 900 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.