டமாஸ்கஸ்,
சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011-முதல் நடைபெற்று வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ராணுவ விமானதளத்தை குறி வைத்து இஸ்ரேஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சனா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகளின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்திய வான்வழி ஏவுகணைத் தாக்குதலில் சிரியாவை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.