கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை அடுத்து செல்ல நாய் மற்றும் அதன் குட்டிகளை நாற்காலியில் அமர வைத்து கிராமவாசி பாதுகாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
பச்சையாங்குப்பத்தில் பெய்த கனமழை காரணமாக குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குமார் என்பவர் தாம் வளர்க்கும் நாய் மற்றும் குட்டிகள், மழைநீரில் அடித்து செல்லப்படாமல் இருப்பதற்காக 2 சேர்கள் மற்றும் டிவி ஸ்டாண்ட்டை அளித்தார்.
மழைநீரில் அவரும், குடும்பத்தினரும் நின்று கொண்டிருக்க, நாய்களுக்கு சேர்களில் இடம் கொடுத்த காட்சி, நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாய் இருந்தது.