தில்லியில், காதலன், காதலியை கொன்று 35 துண்டுளாக வெட்டி புதைத்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 வயது இளம்பெண் ஒருவர் தான் காதலித்தவனை திருமணம் செய்ய முடிவு செய்து, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அவனுடன் செல்ல முடிவு செய்துள்ளார். பின்னர், அவனோடு வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், கதையில் ஏற்பட்ட திருப்பமாக இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். அவளை கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளான் காதலன் குற்றம் சாட்டப்பட்டவர் தேசிய தலைநகரின் வெவ்வேறு இடங்களில் உடல் உறுப்புகளை புதைக்க, 18 இரவுகளுக்கு மேல் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்து வந்துள்ளான்.
தனது காதலியை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி எறிந்ததாகக் கூறப்படும் நபரை தில்லி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அப்தாப் அமீன், மே 18 அன்று பெற்றோரைத் விட்டு விட்டு வந்து தன்னுடன் வாழ வந்த சாரதா என்பவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் தனது உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கினார். அடுத்த 18 நாட்களில், டெல்லியைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் துண்டுகளை அப்புறப்படுத்துவதற்காக அதிகாலை 2 மணியளவில் அவர் தனது வீட்டை விட்டு சென்று, அவளது உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக புதைத்து வதுள்ளார்.
இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், “அவர்கள் அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில், ஒரு சண்டை எல்லை மீறியுள்ளது. இந்த குறிப்பிட்ட நிகழ்வில், அந்த நபர் தனது கோபத்தை இழந்து மே மாதம் அவளைக் கொலை செய்திருக்கிறார். அவன் தனது காதலியை துண்டு துண்டாக வெட்டி, அவளது பாகங்களை அருகிலுள்ள பகுதிகளில் அப்புறப்படுத்தியதாக எங்களிடம் கூறினார். அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” என்றார்.