சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல உள்ளனர். இந்த நிலையில் தமிழக பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் வரும் வியாழக்கிழமை முதல் இயக்கப்படுகிறது.
அதன்படி, சென்னை – பம்பை – குமுளி அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்து வசதி சேவை 2023 ஜனவரி 18ஆம் தேதி வரை இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.