சர்தார் 25வது நாள் : நன்றி சொல்லும் கார்த்தி
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த படம் 'சர்தார்'. இந்தப் படமும் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' படமும் ஒரே நாளில் வெளியாகி போட்டியிட்டன.
இரு முனைப் போட்டியில் 'ப்ரின்ஸ்' படம் மிகச் சுமாராக இருந்ததால் 'சர்தார்' படத்திற்கு ரசிகர்களை வரவழைத்தது. படமும் வித்தியாசமான கதைக்களமாக இருந்ததால் பாசிட்டிவ் விமர்சனங்களையும், பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனையும் பெற்றது. இன்றுடன் படம் வெளிவந்து 25 நாட்களாகிறது. அதற்கு படத்தின் நாயகன் கார்த்தி, “எனது அன்பான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மதிப்பு மிக்க இந்த வெற்றியைத் தந்ததற்கு மனதார நன்றி சொல்கிறேன். 25து நாளில் மகிழ்ச்சியுடன் நுழைகிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரம் நவம்பர் 18ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.