சிறு வயது புகைப்படத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லவ் டுடே இவானா

கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பிரதீப் தானே ஹீரோவாக நடித்து ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் லவ் டுடே படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவானா மற்றும் ரவீனா ரவி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்று வருகின்றது. 

இந்த படத்தில் ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டு உள்ளனர். இவர்களின் காதல் இவானவின் அப்பர் சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அவர் இருவரையும் அழைத்து இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு நாள் மட்டும் இருவரும் தங்களது மொபைல்களை மாற்றிக் கொள்ளுமாறு சொல்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும்.

இதனிடையே முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. தற்போது 8 நாட்களில் இந்த படம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ரீமேக் உரிமைகள் மூலமாக கூடுதலாக லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் வெற்றியின் காரணமாக தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த இவானாவுக்கு பல பட வாய்ப்புகள் குவித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. இதற்கிடையில் எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவானாயின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வரும். ஆனால் தற்போது சிறுவயதில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் இவானாயின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

இதற்கிடையே இந்தச் சந்திப்பின்போது பிரதீப் ரங்கநாதன் தான் தயார் செய்து வைத்திருந்த ஒரு கதையின் அவுட் லைனை ரஜினியிடம் சொன்னதாகவும் அதற்கு ரஜினி க்ரீன் சிக்னல் காட்டி லைனை டெவலப் செய்ய சொன்னதாகவும் தகவல் ஒன்று கசிந்துள்ளது,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.