சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க கோயிலான தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஜெயா டிவியின் சிஇஓ விவேக் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் விவேக், தனது மனைவி கீர்த்தனா மற்றும் குடும்பத்தினருடன் நேற்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அத்துடன் கோயிலில் விவேக்கின் மூத்த மகளான ஆராத்யாவிற்கு மொட்டை போட்டு, முடி காணிக்கையும் செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM