நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து 5ஆவது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தும் நிலையில், ஆட்சியர் அலுவலகம் முன் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
10ஆம் தேதியன்று மாயாண்டி என்ற விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் கைதாகினர். இந்நிலையில், மாயாண்டியின் குடும்பத்திற்கு அரசு வேலை, 50 லட்ச ரூபாய் நிவாரண உதவி உள்ளிட்டவற்றை கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் திடீரென திருவனந்தபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, உறவினர்களுடன் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை,உடன்பாடுகள் ஏதும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.