ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவை சேர்ந்தவர் பழம்பெரும் நடிகை வியாசாமிவசுகி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியை கற்று கொண்ட இவர், தமிழகத்தில் வாழ்ந்து வந்த சித்தர்கள் பற்றி அறிந்து கொண்டுள்ளார்.
மேலும், தமிழ் மொழியாலும், தமிழ் கடவுள் முருகன் மீது கொண்ட ஈர்ப்பாலும் தனது பெயரையே ஷன் மாதாஜி என மாற்றி அமைத்துக் கொண்டார்.
மேலும், அண்மையில் இலங்கை கண்டி கதிர்காம முருகன் கோவிலுக்கு ஆன்மீக சுற்றுப்பயணமாக வந்த ஷன் மாதாஜி, தற்போது தமிழகத்தில் உள்ள முருக கோவில்களில் தரிசனம் மேற்கொண்டு வருகிறார்.
35 வருடங்களாக ஜப்பான் டோக்கியோவில் தமிழ் மொழியை கற்றுகொடுத்து வரும் சேர்ந்த ஆசிரியர் சுப்ரமணியன், ஷன் மாதாஜியுடன் மேலும் 4 ஜப்பான் நாட்டினவரை ஆன்மிக சுற்றளவுக்கு அழைத்து வந்துள்ளார்.
இன்று சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்ட ஷன் மாதாஜி ஒரு வியப்பான தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்திலிருந்து பொன்னி நெல் ரகங்களை ஜப்பானில் ‘முருகா’ எனும் பெயரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருவதாகவும், அப்படி பயிரிட்ட அரிசியை இன்று சுவாமி மலை முருகன் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.