வாரணாசி: வாரனாசி ஞானவாபி மசூதி வழக்கின் தீர்ப்பு வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உபி மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறத்தில் அம்மன் சிலையை வழிபட அனுமதி கோரி 5 பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதே போல் விஸ்வ வேதிக் சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பு ஞானவாபியில் முஸ்லிம்கள் நுழைவதை தடை செய்து அந்த வளாகத்தை தங்கள் அமைப்பிடம் வழங்க வேண்டும்.அங்கு வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் உச்சநீதிமன்றமும் தலையிட்டது.
உச்சநீதிமன்றத்தின் தலையீட்டினால் மாவட்ட விரைவு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த இவ்வழக்கை நீதிபதி மகேந்திர பாண்டே விசாரித்து வந்தார். இதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கில் நவ. 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். அன்றைய தினம் நீதிபதி விடுமுறை என்பதால் தீர்ப்பு 14ம் தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு வரும் 17ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.