மழை பாதிப்புகள் அதிகமுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு, கூடுதல் கவனம் செலுத்தி, கூட்டுறவு கடன் வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக, கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு நிறுவனங்களின் மேலாண் இயக்குநர்களுக்காக, சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாமின்போது, செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், அடுத்த 6 மாதங்களில் 3,500 கூட்டுறவு மையங்கள் தனியார் வங்கிகளுக்கு
நிகராக, கணிணி மையமாக்கப்படும் என்றார்.