டெல்லியில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால், காதலியை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி, காட்டில் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஷரதா (Shraddha) என்ற 26 வயது பெண் மும்பையில் கால்சென்டரில் வேலைபார்த்த போது, சமையல் கலைஞரான அப்தாப் அமீனுடன் (Aftab Ameen Poonawalla) டேட்டிங்கில் இருந்துள்ளார். இதனை ஷரதா குடும்பத்தினர் எதிர்த்ததால், டெல்லிக்கு சென்று ஒரே வீட்டில் அப்தாப் அமீனுடன் வசித்துவந்தார்.
இந்நிலையில், திருமணத்திற்கு ஷரதா வற்புறுத்தியதால், அவரது கழுத்தை நெறித்து கொலைசெய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து, 18 நாட்களாக ஒவ்வொரு உறுப்பாக எடுத்து மெக்ரூலி (Mehrauli) காட்டில் நள்ளிரவு நேரத்தில் அப்தாப் அமீன் வீசி வந்துள்ளார். ஷரதாவை தொடர்பு கொள்ள முடியாததால், அவரது பெற்றோர் அளித்த புகாரில் விசாரணை நடத்திய போலீசார், அப்தாப் அமீனை கைது செய்தனர்.