தொடர் கனமழையால், ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை வலென்சியாவை தாக்கிய புயலால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோடு, சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தி மூழ்கின. மழை வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டனர்.
புயல் காரணமாக, வலென்சியாவில் விமானம் மற்றும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், சேவைகள் மீண்டும் தொடங்கின.