கனேடிய இராணுவத்தில் இனி நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோருக்கு இடமுண்டு.
கனேடிய ஆயுதப் படை (CAF) அறிவிப்பு
கனேடிய இராணுவத்தில் குறைந்த ஆட்சேர்ப்பு நிலைகள் காரணமாக நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோர் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று கனேடிய ஆயுதப் படை (CAF) அறிவித்துள்ளது.
கனடாவில் 10 ஆண்டுகளாக வசிக்கும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கனேடிய ஆயுதப் படைக்கு விண்ணப்பிக்க அனுமதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Royal Canadian Mounted Police (RCMP) “காலாவதியான ஆட்சேர்ப்பு செயல்முறையை” மாற்றுவதாக அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.
தேசிய பாதுகாப்புத் துறை (DND) கொள்கையில் மாற்றம் குறித்து, வரும் நாட்களில் முறையான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக..,
நிரந்தர குடியிருப்பாளர்கள் முன்பு திறமையான இராணுவ வெளிநாட்டு விண்ணப்பதாரர் (SMFA) நுழைவுத் திட்டத்தின் கீழ் மட்டுமே தகுதியுடையவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். குறிப்பாக பயிற்சி பெற்ற விமானி அல்லது மருத்துவர் போன்ற சிறப்புத் தேவைகளை பூர்த்தி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது, விண்ணப்பதாரர்கள் கனடாவின் குடிமக்களாக இருக்க வேண்டும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் (அல்லது 16 வயது, பெற்றோரின் சம்மதம் இருந்தால்), மேலும் அவர்கள் அதிகாரியாக சேர திட்டமிட்டுள்ளாரா என்பதைப் பொறுத்து grade 10 அல்லது grade 12 கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.
பற்றாக்குறை
இந்த ஆண்டு 5,900 உறுப்பினர்களைச் சேர்க்கும் இலக்கை அடைய, ஒரு மாதத்திற்கு தேவைப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் பாதி அளவிலான விண்ணப்பங்கள் மட்டுமே வந்தது. இதனால், ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு செய்பவர்களின் கடுமையான பற்றாக்குறை குறித்து CAF செப்டம்பரில் எச்சரிக்கை விடுத்தது.
சமீபத்திய நடவடிக்கை ஆட்சேர்ப்பை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டதா என்று CAF கூறவில்லை என்றாலும், கனடாவின் ராயல் மிலிட்டரி கல்லூரியின் பேராசிரியரான கிறிஸ்டியன் லியூப்ரெக்ட் இது நல்ல அர்த்தமுள்ள முடிவு என கூறினார்.
குடிமக்கள் அல்லாதவர்களை ஆட்சேர்ப்பு செய்வது எந்த வகையிலும் புதியது அல்ல, பல ஆண்டுகளாக இதை பல நாடுகள் செய்துள்ளன.
Ints Kalnins/Reuters
2025-க்குள் 5 லட்சம் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை எதிர்பார்க்கும் கனடா
2023-2025க்கான குடிவரவு நிலை திட்டத்தை கனடா வெளியிட்டதால் இந்த மாற்றம் வந்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் கனடாவில் வருடத்திற்கு சுமார் 5,00,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை இந்த திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
இந்தியர்கள்
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கனேடியர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் புலம்பெயர்ந்தோர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களாக உள்ளனர்.
2021-ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1 லட்சம் இந்தியர்கள் கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்றுள்ளனர். கனடாவுக்கு வரும் ஐந்தில் ஒருவர் இந்தியாவில் பிறந்தவர்கள் என்று Statistics Canada தரவு காட்டுகிறது.