பவானி: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே ஆனந்தம்பாளையத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மூத்த மகன் திவாகர் (13). இவர், பூதப்பாடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு புறப்பட்ட திவாகர், வீட்டுக்கு அருகே வந்த பள்ளிக்கு சொந்தமான வேனில் ஏறிச்சென்றார். கோனேரிப்பட்டி பேரேஜ் அருகே சென்றபோது டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், நிலை தடுமாறிய திவாகர் வேனில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். அப்போது, வேனின் பின் சக்கரம் திவாகர் மீது ஏறியது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார்.