சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை பெற்றோர் விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நியாயமான விசாரணை நடைபெற மாணவி ஸ்ரீமதியின் செல்போனை ஒப்படைக்க பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் செல்போன் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அதனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.