கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது: ஊழல் வழக்குகளில் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களுக்கு இவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.
மேற்கு வங்க அரசுக்கு எதிராக சதி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீங்கிழைக்கும் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மூத்த தலைவர்கள் தவறு செய்திருந்தால், அந்தத் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். தவறு இழைத்தவர்களைத் தண்டிக்க சட்டம் தன் கடமையைச் செய்யும். ஆனால் ஊடகம் விசாரணை நடத்தி கொண்டு இருக்கிறது” என்றார்.