பொதுவாக இன்றைய காலத்தில் பலரும் தொப்பை பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பெரியவர்கள் வரை பள்ளி செல்லும் சிறுவன் கூட தொப்பையுடன் இருப்பதை காண முடிகிறது.
இதற்கு காரணம் உணவு பழக்கத்தில் தொடங்கி, வாழ்க்கை முறையே மாறி இருப்பது தான்.
தொப்பை வயிற்றின் உள்ளேயும், அடிவயிற்று பகுதியிலும் கொழுப்பு சேர்வதால் உண்டாகிறது.
இதனை கரைக்க சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
ரிவர்ஸ் க்ரஞ்ச் (Reverse crunch)
உடற்பயிற்சியால் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, சிக்ஸ் பேக் வைக்கவும் முடியும்.
அதற்கு தரையில் படுத்துக் கொண்டு, கால்களை தூக்கி 90 டிகிரி மடக்கி, கைகளை கழுத்திற்கு பின்னால் வைத்துக் கொண்டு, முன்னோக்கி எழும் போது மூச்சை வெளி விடவும், பின்னோக்கி செல்லும் போது மூச்சை உள்ளிழுக்கவும்.
இதேப்போன்று 50-60 முறை தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
வெர்டிகிள் லெக் க்ரஞ்ச் (Vertical leg crunch)
உடற்பயிற்சியின் மூலமும் வயிற்றுக் கொழுப்புக்களை கரைக்கலாம். இந்த உடற்பயிற்சியை செய்ய, தரையில் படுத்துக் கொண்டு, கால்களை மேலே தூக்கி, கைகளை தலைக்கு பின்புறம் வைத்துக் கொண்டு, தலையை முன்னோக்கி தூக்க வேண்டும்.
இந்த உடற்பயிற்சியின் போது முன்னோக்கி எழும் போது மூச்சை வெளி விடவும், பின்னோக்கி செல்லும் போது மூச்சை உள்ளிழுக்கவும்.
இந்த உடற்பயிற்சியையும் 50-60 முறை செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி பந்து க்ரஞ்ச் (Exercise ball crunch)
இந்த உடற்பயிற்சியின் போது, உடலின் அனைத்து தசைகளும் செயல்படும்.
உடற்பயிற்சி பந்தின் மேல் படுத்துக் கொண்டும், தரையில் கால்களை நன்கு ஊன்றி, கைகளை தலைக்கு பின் வைத்துக் கொண்டு, முன்னும், பின்னும் எழ வேண்டும்.