உலக மக்கள் தொகை 800 கோடியை எட்ட உள்ள நிலையில் 2027-ல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவை முந்தி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை 11-ல் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு உலக மக்கள் தொகை நாளன்று ஐ.நா. வெளியிட்ட மக்கள் தொகை புள்ள விவரத்தில் நவ. 15-ல் உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என கணித்திருந்தது.
இன்று (நவ.15) வரவிருப்பதால் இந்த புள்ள விவரங்கள் மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது. ஏற்கவே உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்துவிட்டதாக அமெரிக்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் தற்போது சீனா முதலிடத்திலும் இருக்கிறது. 2027-ல் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
2050-ல் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் இந்தியா -பாகிஸ்தான் , காங்கோ, எகிப்து, எத்தியேபியா, நைஜீரியா , பிலிப்பைன்ஸ் , தான்சானியா ஆகிய 8 நாடுகளில் அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-ல் 800 கோடியை எட்டும் மக்கள் தொகை 2030-ல் 850 கோடியை எட்டும்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement