JUST IN : நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… எங்கு தெரியுமா ?

கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து வருகிறது.

இன்று சீர்காழி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார். பாய், போர்வை, அரிசி, மளிகைபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளர்.

இந்நிலையில் கனமழை பாதிப்பு காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். மயிலாடுதுறை, குத்தலாம் வட்டங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.