கடந்த மாதம் 16 ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது T20 உலகக்கோப்பை தொடர் நேற்றோடு முடிவடைந்தது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் – இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. உலகக் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு ரசிகர்கள்,
கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.13.84 கோடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.7.4 கோடி பரிசுத் தொகையை இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் வென்றது. அரையிறுதியில் தோல்வியடைந்த நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு ரூ.4.19 கோடியும், இதில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி நியூசிலாந்தை விடக் கூடுதலாக ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், இந்திய அணிக்கு ரூ.4.50 கோடியும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.