இன்னும் 2 நாட்கள்… அடுத்த சக்கரம்… ஜஸ்ட் மிஸ்ஸான சென்னை… தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது இரண்டு தவணைகளில் வெளுத்து வாங்கிவிட்டது. தற்போது மழைக்கு லீவு விடப்பட்டதை போன்ற சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் சில தகவல்களை தனது பேஸ்புக் பக்கத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளார். அதில், அண்ணா நகர் முதல் பெரம்பூர் வரையிலான பகுதியில் நல்ல மழைப்பொழிவு கிடைத்துள்ளது.

இரண்டாவது முறை இத்தகைய மழையை பெற்றிருக்கிறோம். நவம்பர் 11 முதல் 14ஆம் தேதி வரையிலான மழை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இன்றைய தினம் அடுத்த மழைக்கான வாய்ப்பிருக்கிறது. ஆனால் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. கடந்த 4 நாட்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 250 முதல் 300 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.

இது நிச்சயம் வரவேற்கக் கூடிய விஷயம். ஒட்டுமொத்தமாக 30 செ.மீ மழை மூலம் 90 சதவீத இலக்கை அடைந்திருக்கிறோம். சீர்காழி மழையை போல் தமிழக கடலோரப் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் வெளுத்து வாங்கலாம். சென்னையில் இதுபோன்று மழை பெய்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும். வரும் 20ஆம் தேதி வாக்கில் தமிழக கடலோரப் பகுதியில் முதல் சக்கரம் உருவாக வாய்ப்புள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும். இது படிப்படியாக வலுப்பெற்று சக்கரமாக மாறும். அதாவது புயலாக மாற வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள் சற்று வறண்டு காணப்படுகின்றன. இதனால் சாதகமான சூழல் ஏற்படுவது கடினம் தான். இருப்பினும் பொறுத்திருந்து பார்ப்போம். தென் தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்யும்.

இன்றைய தினம் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நெல்லையில் தான் அதிகபட்ச மழை பெய்திருக்கிறது. அதாவது நாலுமுக்கு என்ற இடத்தில் 12 செ.மீ அளவிற்கு மழை பதவாகியுள்ளது. இதையடுத்து மாமல்லபுரம், காக்காச்சி பகுதிகளில் தலா 9 செ.மீ, கீழ்கோதையாறு, குலசேகரப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ, வந்தவாசி,

டிஜிபி அலுவலகம், வைப்பாறு, வடபுதுப்பட்டு, நாகர்கோவில், ஆம்பூர், பாபநாசம், கொடைக்கானலில் தலா 4 செ.மீ மழை பெய்திருக்கிறது. மேலும் கனமழை எச்சரிக்கையால் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் இன்று (15-11-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.