ஊழல் குறித்து விவாதம்… ஆடிப்போன அமித் ஷா.. திகிலில் திமுக அமைச்சர்கள்

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக 36 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு பிரதர் மோடி வருகை தந்தார். அதேபோல தனியார் நிறுவன நிகழ்ச்சிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வந்திருந்தார். இரண்டு பேருடைய தமிழக பயணம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் அமித் ஷா சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு சென்றது கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் வெற்றிடம் இருப்பதாக அமித் ஷா கூறிவிட்டு சென்றதாகவும் தகவல் கசிந்தன. இது திமுகவை மட்டுமல்லாமல் அதிமுகவையும் கடுப்பேற்றியுள்ளது. அடுத்து வரும் தேர்தல்களில் பாஜக –

என்ற போட்டியே நிலவும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டுமின்றி டெல்லி மேலிடமும் உறுதியாக உள்ளது . ஆகையால், திமுக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனித்து ஒவ்வொரு நாளும் அமைச்சர்களின் குறைகளை ஊடக வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என்ற அசைன்மென்ட்டும் கட்சி நிர்வாகிகளுக்கு அமித் ஷா கொடுத்துள்ளாராம்.

அதே சமயம், அடுத்து வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கோவை உட்பட 4 தொகுதிகள், தென் மண்டலத்தில் கன்னியாகுமரி உட்பட 3 தொகுதிகள், சென்னையில் 1 தொகுதி, டெல்டாவில் 2 தொகுதிகள் என்று 10 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று அண்ணாமலைக்கு அமித் ஷா உத்தரவு போட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், சென்னையில் நடந்த ஆலோசனையில் மொத்தம் நான்கு அசைன்மென்ட்டுகளை கொடுத்துள்ள அமித் ஷா, திமுகவின் ஊழல் குறித்து விவாதித்ததாக கட்சி நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஏற்கனவே திமுக அமைச்சர்களின் ஊழல் குறித்த ரிப்போர்ட்டை அண்ணாமலை டெல்லிக்கு சென்று கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் அமித் ஷாவே அதுகுறித்து விவாதிருப்பது திமுக அமைச்சர்களை கலக்கம் அடைய செய்துள்ளது. இதனாலேயே திமுக பம்ம தொடங்கியதாகவும், கூட்டணி கட்சிகள் கூட பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தனர் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

இதற்கு மத்தியில், திமுகவின் ஊழல் குறித்து நாட்டு உள்துறை அமைச்சர் விவாதிருப்பது, திமுக அமைச்சர்களுக்கு மறைமுக எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.