குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றால் பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். கடந்த ஆண்டு விஜய் ரூபானிக்கு பதிலாக பூபேந்திர படேல் முலமைச்சராக பொறுப்பேற்றார்.
குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவும், 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.