தமிழகஅரசு ‘வாகன பெர்மிட்’ கட்டணத்தை பலமடங்கு உயர்த்த முடிவு! ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் உயரும் அபாயம்…

சென்னை: தமிழகஅரசு வாகன பெர்மிட் கட்டணத்தை பலமடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, ஆம்னி பேருந்து, சரக்கு வாகனம் மற்றும் ஆட்டோ கட்டணங்கள்  மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகஅரசு வருமானத்தை ஈட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே சொத்து வரி, கழிநீர் குடிநீர் வரி, மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் வாகனப்பதிவு உள்பட பல்வேறு வரிகளும் உயர்த்தப்பட்டு உள்ளன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அரசுக்கு வருமானம் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், வாகனங்களுக்கான வரியையும் உயர்த்த முடிவு செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உட்பட 1.99,040 கிமீ நீளம் கொண்டது. தமிழ்நாட்டில் சாலை வரி சாலையில் செல்லும் வாகனங்கள் வரி செலுத்துவதை உறுதி செய்ய மாநில அரசு கடுமையான விதிமுறைகளை மாநிலம் முழுவதும் வகுத்துள்ளது.  சாலை வரி கணக்கீடு தமிழ்நாட்டில் சாலை வரி தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிப்பு சட்டம் 1974ன் கீழ் கணக்கிடப்படுகிறது. மோட்டார் சைக்கிள் எஞ்சின் திறன், வாகனத்தின் வயது, உற்பத்தி, மாடல், இருக்கை திறன், விலை போன்ற பல்வேறு காரணிகளின் மீது வரி கருதப்படுகிறது.

கடந்த 2021-22 ஆம் ஆண்டில் பசுமை வரி, வாகனப் பதிவு மற்றும் சாலை வரி மூலம் தமிழக அரசுக்கு மொத்த வருவாய் சுமார் 5,272 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது.  இந்த நிலையில், தமிழகஅரசு பல்வேற வரி மற்றும் கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் தனது சொந்த வருவாய் ஆதாரங்களை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து துறையிலும் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி வாகனங்களக்கு  அனுமதி வழங்குதல், அனுமதி புதுப்பித்தல் போன்ற பல போக்குவரத்து துறை சேவைகளுக்கான கட்டணத்தை நான்கு மடங்கு வரை உயர்த்த மாநில அரசு முன்மொழிந்துள்ளது.

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989 இல், அனுமதி வழங்குதல், அனுமதிகளைப் புதுப்பித்தல், அனுமதிப் பத்திரங்களை மாற்றுதல் மற்றும் அனுமதியை புதுப்பிப்பதற்கான காலதாமதமான விண்ணப்பங்கள் போன்ற சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கான வரைவுத் திருத்தத்தை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வரைவு அறிவிப்பின்படி,

சரக்கு வண்டி அனுமதிச் சீட்டுக்கு முந்தைய 1,200 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயும் உயர்த்தப்படும்.

ஸ்டேஜ் கேரேஜுக்கான அனுமதி 1,500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாகவும்,

காண்டிராக்ட் கேரேஜ் ஆம்னி பஸ்களுக்கான அனுமதி 1,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஒரு ஆட்டோரிக்ஷா மற்றும் வண்டிக்கு முறையே ரூ.300  வசூலிக்கப்பட்டது, இனிமேல் 400 அகவும், மற்றும் ரூ.525ல் இருந்து ரூ.1,100 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

மேக்சி கேப் போன்வேன்களுக்கு இதுவரை ரூ.750 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், அது 1500 ஆக உயர்த்தப்பட உள்ளது.

துவரை, மோட்டார் வாகன வரி, கற்றோர் உரிமப் பதிவு (எல்எல்ஆர்) கட்டணம், ஓட்டுநர் உரிமக் கட்டணம் மற்றும் துறையின் முக்கிய வருவாய் ஆதாரங்களாக இருக்கும் சில கட்டணங்கள் மற்றும் வரிகளை அரசாங்கம் திருத்தவில்லை. இதையடுத்து, தற்போது பல மடங்கு உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துளளது.

தமிழகஅரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்தள்ள  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் அன்பழகன், இந்த வரி உயர்வு காரணமாக, ஆம்னி பேருந்துத் துறை மேலும் பின்னடைவை சந்திக்கும் என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. கோவிட்-19க்கு முன் மாநிலத்தில் இயக்கப்பட்ட 4,000 ஆம்னி பேருந்துகளில், 1,200-1,500 பேருந்துகள் மட்டுமே தற்போது இயங்கு கின்றன. இந்த நேரத்தில் கட்டணத்தை மாற்றியமைப்பது சரியல்ல,” என்று கூறியதுடன், போக்குவரத்து துறையில்,  இப்போது ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் கூறும்போது?  கட்டண உயர்வு ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும். “ஒரு ஓட்டுநர் முன்பு அனுமதியைப் புதுப்பிக்க ரூ.1,500 செலவழிக்க வேண்டும். இப்போது அது ரூ. 5,000 ஆக உயரும்,” என்று அவர் கூறினார், மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் இயக்கங்களில் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச சவாரிகளால் ஓட்டுநர்கள் பாதிக்கப்படும்போது அரசாங்கம் ஸ்பாட் ஃபைன் மற்றும் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது எங்களின் வாழ்வதாரம் மட்டுமின்றி பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.