இலங்கை – இந்தியா இடையே பயணிகள் கப்பல் விரைவில் துவக்கப்படும் என்று இலங்கை அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை- இந்தியாவுக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
அந்த பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில் விரைவில் கப்பல் சேவையினை ஆரம்பிக்கக் கூடிய சாத்தியகூறுகள் காணப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.