சென்னையில் 12, திருவள்ளூரில் 130 ஏரிகள் நிரம்பியது! சென்னை மக்களே உஷார்!

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 578 ஏரிகளில் 130 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மீதமுள்ள ஏரிகளில் 106 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதேபோல் 130 ஏரிகள் 50% முதல் 75% நிரம்பிள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 564 ஏரிகளில் 182 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. மேலும் 211 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில் 150 ஏரிகள் 50% முதல் 75% நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 88 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அதேபோன்று 39 ஏரிகள் தினமும் தருவாயில் உள்ளன. மேலும் 135 ஏரிகள் 50% முதல் 75% நிரம்பியுள்ளது. 

விரிவுபடுத்தப்பட்ட சென்னையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 28 ஏரிகள் உள்ளன. அவற்றில் 12 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில் 14 ஏரிகளில் 75% அளவிற்கு நீர் தேங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் வரும் 20ம் தேதி முதல் தமிழக முழுவதும் பரவலாக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரிகளில் இருந்து வரும் மழைநீரானது முழுமையாக திறக்க நேரிடும். போரூர் ஏரியிலிருந்து திருந்துவிடப்பட்ட உபரி நீரால் ஆலந்தூர் பகுதியில் இடுப்பளவிற்கு மேல் தண்ணீர் தேங்கியது. அதேபோன்று சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கும் என்பதால் தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.