தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், அதன் காரணமாக தமிழகத்திற்கு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த ஒரு மணி நேரத்தில் கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.