தொடரும் கொடுமை.. 40 மாணவர்கள் ராகிங்.. 7 மாணவர்கள் இடைநீக்கம்..!

சமீபத்தில், வேலூரில் எம்பிபிஎஸ் மாணவர்களை ராகிங் செய்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் 40 மாணவர்கள் ராகிங் கொடுமைக்கு ஆளாகியது அம்பலத்துக்கு வந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் மருத்துவக் கல்லூரியில் 40 மாணவர்களை ராகிங் செய்த விவகாரம், ஒரு மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வெளிச்சத்துக்கு வந்தது.

கடந்த 11-ம் தேதி இரவு, எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களை, முகமூடி அணிந்து கொண்டு வந்த மூத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் 7 பேர், மாடியில் தள்ளி, கதவை சாத்தியுள்ளனர். நள்ளிரவில் நடுங்கும் குளிரில் மாணவர்கள் இருந்துள்ளனர்.

இது குறித்து மறுநாள் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து மற்ற மாணவர்களும் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம், இதில் தொடர்புடைய 7 எம்பிபிஎஸ் மாணவர்களை கல்லூரியிலிருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.