நாயகன் மீண்டும் வரார்..! – களத்தில் குதித்த டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்து உள்ளார்.

அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்தவர் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப். 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்த டொனால்டு ட்ரம்ப், அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். இவர் அதிபராக இருந்த காலத்தில் வட கொரியா உடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உட்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனிடம், டொனால்டு ட்ரம்ப் தோல்வி அடைந்தார். இந்தத் தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியாத டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்குள் புகுந்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்தது.

இதன் பின்னர், வன்முறையை தூண்டி விட்டதாகக் கூறி, டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை, அந்நிறுவனம் முடக்கியது. இதற்கிடையே, 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அண்மையில் தகவல் வெளியானது.

உலகின் 800 ஆவது கோடி அதிசய குழந்தை எங்கு பிறந்துள்ளது தெரியுமா?

இந்நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக, டொனால்டு ட்ரம்ப் அறிவித்து உள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களையும் அவர் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த டொனால்டு ட்ரம்ப், “அமெரிக்காவின் மறுபிரவேசம் தற்போதில் இருந்தே தொடங்குகிறது” என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.