கேப் கனாவெரல் : நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நீண்ட போராட்டத்திற்கு இன்று(நவ.,16) நாசா வெற்றிக்கரமாக செலுத்தியுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ல் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. அது, 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்டெமிஸ் – 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான, ‘ஓரியன்’ விண்கலத்தை சுமந்து செல்கிறது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆர்டெமிஸ் – 1 ராக்கெட் இந்திய நேரப்படி கடந்த ஆக.28-ம் தேதி, மாலை 6:00 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. கடைசி நிமிடத்தில், இயந்திரத்தில் எரிபொருள் கசிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சோதனை முயற்சி ஒத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து செப்.03ம் தேதி, மற்றும் செப். 23-ம் தேதி சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு, தொழில் நுட்ப காரணமாக முயற்சியை நாசா ஒத்தி வைத்தது. நிலவுக்கு மனிதனை அனுப்பும், , ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் சோதனை முயற்சி, இயந்திர கோளாறு காரணமாக மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று(நவ.,15) நள்ளிரவில் ராக்கெட்டை செலுத்த தயாரான நிலையில், திடீரென ஹைடிரஜன் வாயு கசிவை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து 322 அடி நீளமுள்ள ராக்கெட்டுக்குள் மீண்டும் எரிபொருளை செலுத்தி, வெளியேற விடாமல் பாதுகாப்புடன் வைக்க முடியும் என்ற நோக்கில் விஞ்ஞானிகள் செயல்பட்டனர்.
இந்நிலையில் 6 மணி நேர திட்டம் இறுதியடையும் சூழலில் ஹைடிரஜன் வாயு கசிவு கண்டறியப்பட்டது. இதற்காக வாயுவின் அழுத்தம் குறைக்க செய்யும் முக்கிய பணியும் நடந்தது. ஒருபுறம் கவுன்ட்-டவுன் நடந்தபோதும் மறுபுறம் சிவப்பு குழு எனப்படும் பணி குழுவினர் தொடர்ந்து கசிவை சரி செய்யும் பணியை தொடர்ந்தனர்.
அந்த ராக்கெட்டுக்குள் 37 லட்சம் லிட்டர் அளவுக்கு அதிகம் குளிர்விக்கப்பட்ட ஹைடிரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயு உட்செலுத்தப்பட்டு உள்ளது. எரிபொருள் கசிவை சரிசெய்யும் சூழலில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த பணி ஒரு வழியாக நிறைவடைந்தது.
இந்த நிலையில், நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நீண்ட போராட்டத்திற்கு பின்பு இன்று மதியம் 12.17 மணியளவில், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது.
இதனால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ராக்கெட் செலுத்தப்பட்ட எட்டு நிமிடங்களுக்கு பின்னர், மைய பகுதியில் உள்ள இயந்திரம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக சென்றது. இதனை அடுத்து, ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு இருந்த ஆரியன் விண்கலம் நிலவை நோக்கி பயணிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்