சக்தி வளம் தொடர்பிலான கடுமையான நெருக்கடி நிலைமை தொடர்ச்சியாக நீடித்து வரும் இன்றைய கால கட்டத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு பல்வேறு வழிகளில் நூதனமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு அவை வெற்றி பெற்றுள்ளன.
அந்த வகையில் பிரித்தானியாவில் ஓர் நகரில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வழியாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது என்றால் நம்ப முடிகின்றதா?
ஆம் நடைபாதையில் மக்கள் நடக்கும் போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
Shropshire-ன் Telford நகரில் இவ்வாறு நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்த நடைபாதையில் மக்கள் அடி எடுத்து வைக்கும் போது அவை மின்சார சக்தியாக மாற்றமடைகின்றது.
இந்த மின்சாரத்தைக் கொண்டு மக்கள் அலைபேசிகள் மற்றும் ஏனைய சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ள முடிகின்றது.
தாங்கள் எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்தோம் என பாதாரியொருவர் அறிந்து கொள்ள வேண்டுமாயின் அதனையும் திரையில் காணக்கூடிய வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
டுபாய், மிலன் மற்றும் ஹோங்கொங் போன்ற நகரங்களிலும் இவ்வாறான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மின்காந்த மின்பிறப்பாக்கி ஊடாக இந்த நடைபாதைகளில் மின்சாரம் உற்பத்தி செய்பய்படுகின்றது.
ஒரு மணித்தியாலத்திற்கு இந்த நடை பாதை ஊடாக 2.1 வெட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மாற்றத்திற்கு தீர்வு வழங்கும் முறையில் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக 4 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்கள் செலவிடப்பட்டுள்ளன.