மில்லனிய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: அதிபர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை


மில்லனிய பகுதியில் மாணவர்களை துன்புறுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதிபர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவினால் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (16) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பணம் திருட்டு 

மில்லனிய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: அதிபர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை | Child Abuse Principal Policemen Released On Bail

ஆசிரியர் ஒருவரின் பணத்தை திருடியதாகக் குற்றஞ்சாட்டி ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் சில மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சார்பில் மன்றில் முன்னிலையாகிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

சித்திரவதைக்கு உள்ளாகிய குறித்த மாணவர்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த, பெற்றோர் விருப்பம் தெரிவிக்கவில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி கூறியுள்ளார்.

மீண்டும் விசாரணை திகதி

மில்லனிய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: அதிபர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை | Child Abuse Principal Policemen Released On Bail

சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இச்சம்பவம் காரணமாக அதிபர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், மில்லனிய ஓ.ஐ.சி.யை இடமாற்றம் செய்வதற்கும் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.