Delhi Murder Case: கடும் தண்டனையில் இருந்து தப்பிக்க அப்தாப் போடும் மெகா பிளான்

ஷ்ரத்தா வாக்கர் கொலை: பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தன் காதலுடன் வந்த ஷ்ரத்தாவுக்கு நேர்ந்த கொடுமையை பார்த்து நாடே அதிர்ச்சியில் இருக்கிறது. தன்னை நம்பி வந்த பெண்ணுக்கு விசுவாசமாக இல்லாமல், வேறு பெண்களுடன் பழகி வந்த அப்தாப் அமீன் பூனாவாலாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஷ்ரத்தா வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்தாப், ஷ்ரத்தா வாக்கரைக் கொடூரமாக கொலை செய்துள்ளார். ஆத்திரத்தில் கொலை செய்து இருந்தாலும், அதன் பிறகு அவர் அடுத்தடுத்த நாட்களில் மிகவும் சிந்தனையுடன் செயல்பட்டு உள்ளர். அறையில் ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்த கொன்ற பிறகு, இறந்த உடலை அப்புறப்படுத்துவது மற்றும் அப்புறப்படுத்துவதற்கு முன் இறந்த உடலை துண்டு துண்டாக்குவது என, இவற்றையெல்லாம் அவர் மிகவும் கவனமாகக் கையாண்டுள்ளார். இது மட்டுமின்றி, வீட்டில் இருந்து உடல் துண்டுகளை அப்புறப்படுத்திய பின், அறையிலிருந்து ஒவ்வொரு ஆதாரத்தையும் அழிப்பது எப்படி? அவற்றை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? என்ற கோணத்தில் எல்லாம் ஆய்வு செய்து கொலையை மறைக்க அனைத்து அரங்கேற்றத்தையும் செய்துள்ளார். டெல்லியில் நடந்த கொடூரமான கொலை பற்றி போலீஸ் முன் குற்றவாளி அப்தாப் அளித்த வாக்குமூலம் பற்றி தெரியுமா? தன்னை கடுமையான தண்டனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள அப்தாப் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி தெரியுமா? வாருங்கள் அறிந்துக்கொள்ளுவோம்.

போலிசாரின் கேள்விக்கு நிதானமாக பதில் அளிக்கும் அப்தாப்:

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நவம்பர் 13 முதல் டெல்லி காவல்துறையின் காவலில் இருக்கும் அப்தாப்புக்கு  இந்தி தெரிந்தாலும், போலீசாரின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தொடர்ந்து பதில் சொல்லி வருகிறார். போலிசாரின் முன்பு கிளி போல் பேசி வருகிறார். ஒவ்வொரு கேள்விக்கும் அப்தாப் மிகவும் நிதானமாக பதில் அளித்து வருவதாகவும், அவரின் பதிலால் டெல்லி போலீசார் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இது போலீசாருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரைக் கடுமையாக தண்டிக்க நீதிமன்றத்தில் தேவையான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது சற்று கடினம் என்பதை டெல்லி காவல்துறை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறது. அதற்கான பணிகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

அப்தாப்பிடம் டெல்லி போலீசார் நடத்திய விசாரணை விவரங்கள்:

போலீஸ் – ஷ்ரத்தா எப்போது, ​​எப்படி கொல்லப்பட்டார்?
அப்தாப் – மே 18 புதன்கிழமை இரவு ஷ்ரத்தாவுக்கும் எனக்கும் சண்டை நடந்தது. இதற்கு முன்பும் பலமுறை வாக்குவாதம் தகராறு நடந்து வந்தது. ஆனால் அன்று விஷயம் பெரிதாகிவிட்டது. அப்போது நான் ஷ்ரத்தாவின் கழுத்தை நசுக்கினேன். அதைத் தொடர்ந்து, ஷ்ரத்தாவை கீழே தள்ளி, அவளது மார்பின் மீது அமர்ந்து, இரண்டு கைகளாலும் கழுத்தை நெரித்தேன். சிறிது நேரத்தில் அவள் இறந்துவிட்டாள் எனக் கூறியுள்ளார்.

போலீஸ் – இறந்த உடலை என்ன செய்தீர்கள்?
அப்தாப் – அன்று இரவு ஷ்ரத்தாவின் இறந்த உடலை குளியலறையிக்கு இழுத்து சென்று வைத்துவிட்டேன். இரவு முழுவதும் சடலம் அங்கேயே கிடந்தது என்றார்.

போலீஸ் – எப்படி, எப்போது இறந்த உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது?
அப்தாப் – நான் மே 19 அன்று சந்தைக்குச் சென்றேன். உள்ளூர் சந்தையில் கீர்த்தி எலக்ட்ரானிக் கடையில் 300 லிட்டர் அளவுகொண்ட ஃப்ரிட்ஜ் வாங்கினேன். வேறொரு கடையில் இருந்து ரம்பம் வாங்கினேன். பிறகு வீடு திரும்பிய நான், இரவு நேரத்தில் குளியலறையில் இருந்த இறந்த உடலை ரம்பத்தால் துண்டுகளாக வெட்டினேன். சில நாட்கள் சமையல்காரராக வேலை பார்த்தேன். அதற்கு முன், சுமார் இரண்டு வார பயிற்சியும் எடுத்தேன். அங்கு ​​சிக்கன் மற்றும் மட்டன் எப்படி துண்டு துண்டாக வெட்டுவது எனக் கற்றுக்கொண்டேன். மே 19 அன்று, நான் இறந்த உடலில் இருந்து சில துண்டுகளை வெட்டினேன். அவற்றை பாலிதீன் பைகளில் வைத்து, அந்த துண்டுகளை பாலிதீனுடன் சேர்த்து டீப் ஃப்ரீசரில் வைத்தேன். சடலத்தின் மீதமுள்ள பாகத்தை குளிர்சாதன பெட்டியின் அடிப்பகுதியில் வைத்தேன் எனப் பதில் அளித்தார். 

போலீஸ் – எத்தனை நாட்கள் இறந்த உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது?
அப்தாப் – மே 19 மற்றும் 20 என இரண்டு நாட்கள் உடலை துண்டு துண்டுடாக வெட்டியதாகக் கூறினான்.

போலீஸ் – நீங்கள் எப்போது இறந்த உடல்களை அப்புறப்படுத்த ஆரம்பித்தீர்கள்?
அஃப்தாப்- முதன்முறையாக 19 மற்றும் 20 ஆம் தேதி இரவு, இறந்த உடலின் சில துண்டுகள் ஃப்ரீசரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு ஒரு பையில் வைக்கப்பட்டன. முதல் இரவு பையில் துண்டுகள் குறைவாக இருந்தன. ஏனென்றால், வழியில் போலீஸ் அவரைத் தேடிவிடக் கூடாதென்று, இறந்த உடலின் துண்டுகளுடன் இரவில் வெகுநேரம் வெளியே செல்ல பயமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

போலீஸ் – முதன்முறையாக இறந்த உடலின் துண்டுகளை எங்கே வீசினாய்?
அப்தாப்- மே 19 மற்றும் 20 ஆம் தேதி இரவு, மெஹ்ராலி காட்டில் துண்டுகள் வீசப்பட்டன. ஆனால் காட்டுக்குள் அதிக தூரம் செல்லவில்லை.

போலீஸ் – எத்தனை நாட்களில் இறந்த உடலின் துண்டுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன?
அப்தாப்- எனக்கு சரியாக ஞாபகம் இல்லை, ஆனால் குறைந்தது இருபது நாட்களுக்கு நான் இறந்த உடலின் துண்டுகளை வெளியே கொண்டுபோய் வீசினேன்.

போலீஸ் – சடலத்தின் துண்டுகள் எங்கே வீசப்பட்டன?
அப்தாப்- சத்தர்பூர் மற்றும் மெஹ்ரோலி பகுதிகளில் மட்டுமே வீசினேன். அதிக தூரம் சென்றால் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருந்தது என்றான்.

போலீஸ் – அந்த இடம் முழுவதும் நினைவிருக்கிறதா?
அப்தாப் – இல்லை, ஆனால் எனக்கு சில இடங்கள் தெரியும். இரவில் அதிக இருட்டாக இருந்தது. அதனால்தான் எல்லா இடங்களும் சரியாக நினைவில் இல்லை.

போலீஸ் – வீட்டில் 20 நாட்களாக இறந்த உடல்கள் துண்டுகள் இருந்தன. இந்த நேரத்தில் உங்கள் பழவழக்கம் என்ன?
அப்தாப்- வீட்டில் சடலம் இருந்ததால், நான் வீட்டை விட்டு வெளியே செல்லவே இல்லை. அண்டை வீட்டாரையும் சந்திக்கவோ பேசவோ இல்லை. ஃப்ரிட்ஜின் அடிப்பகுதியிலிருந்து டீப் ஃப்ரீசருக்கும், கீழே ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருக்கும் துண்டுகளையும் திரும்பத் திரும்ப மாற்றிக் கொண்டிருந்தேன். அதனால் இறந்த உடல் வாசனை வெளியே வராது. வீடு, தரை, குளியலறையை ரசாயனங்களால் சுத்தம் செய்து வந்தேன்.

போலீஸ் – முழு உடலையும் அப்புறப்படுத்திவிட்டு என்ன செய்தீர்கள்?
அப்தாப்- மீண்டும் வீடு முழுவதையும் சுத்தம் செய்தேன். குளிர்சாதனப் பெட்டி காலியான பிறகு, குளிர்சாதனப்பெட்டியும் ரசாயனங்கள் மூலம் நன்கு சுத்தம் செய்யப்பட்டது. குளியலறை, தரை, சுவர், தாள், துணி எல்லாம் துவைத்து சுத்தம் செய்யப்பட்டது.

போலீஸ் – ஏன் இவ்வளவு சுத்தம் செய்தாய்?
அப்தாப்- ஒன்று, வீட்டில் இருந்து இறந்த உடலின் வாசனையை அகற்றுவது, இரண்டாவதாக, வீட்டிற்குள் இரத்தம் அல்லது சதை எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்பினேன். விரைவில் இந்த உண்மை வெளிவரும் என்றும், பின்னர் இந்த வீடு மற்றும் குளிர்சாதன பெட்டி குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் எனக்குத் தெரியும். அதனால்தான் என் தரப்பிலிருந்து எல்லா ஆதாரங்களையும் அழித்தேன் என்றார்.

போலீஸ்- காதலித்தவரின் பிணத்துடன் இப்படி நடந்து கொள்வதற்கு முன் ஒரு முறை கூட யோசிக்கவில்லையா?
அப்தாப் – இல்லை. எனக்கு கோபம் வந்தது. அதனால் தான் நான் ஷ்ரத்தாவை கொன்றேன் ஆனால் அவள் இறந்த உண்மை வீட்டை விட்டு வெளியே போக விரும்பவில்லை. ஷ்ரத்தாவின் குடும்ப உறுப்பினர்களும் அவரிடமிருந்து விலகி இருந்தனர். அவர் தனது குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் பேசவில்லை. அவரைத் தேடி யாரும் வரமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் இறந்த உடலை இப்படி அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு நானும் அதையே செய்தேன் என்றான்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.