அனைத்து விதிமுறைகளை பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு விளக்கம்..!

டெல்லி: அனைத்து விதிமுறைகளை பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. கோவாக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதியும் செய்தது. இந்த தடுப்பூசி 2 டோஸ் மற்றும் பூஸ்டர் டோசாக நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதுவரை, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் கோவாக்சின் உட்பட 219.83 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே கோவாக்சின் தடுப்பூசியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், 3 கட்ட பரிசோதனைகளிலும் ஒப்புதல் வழங்கியதில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அனைத்து விதிமுறைகளை பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; இதுபோன்ற தகவல் அனைத்தும் வதந்தி என்றும், உண்மையில்லை என்றும், எந்த ஒரு அரசியல் அழுத்தத்தின் பேரில் கோவாக்சின் மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை.

அவசரகால பயன்பாட்டு தடுப்பூசிக்கு என பல விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்தே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், கோவாக்சின் உள்ளிட்ட கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான அங்கீகாரம் நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே தேசிய கட்டுப்பாட்டாளரால் வழங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.