சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசால் கூறப்படுவது பயங்கரமான ஒரு அனுபவமாக இருந்தாலும், சில நேரங்களில் அப்படி நடந்துவிடுகிறது.
எத்தகைய சூழ்நிலைகள் இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை எடுக்க சுவிஸ் அதிகாரிகளைத் தூண்டுகின்றன?
சமீபத்தில் ஆஸ்திரிய நாட்டவரான ஓய்வு பெற்ற ஒருவர் சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.
இத்தனைக்கும் அவர் பல ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருந்தார். தனக்கு அரசின் உதவிகள் ஏதாவது கிடைக்குமா என அவர் கேட்கப் போக, அவரை நாட்டைவிட்டு வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டார்கள்.
அவர் குற்றப்பின்னணி கொண்டவரும் அல்ல.
அப்படியிருந்தும் அவரை சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேற சொல்லப்பட்டதற்குக் காரணம், அவர் 10 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறி வேறொரு நாட்டுக்குச் சென்றிருந்தார். அந்த காலகட்டத்தில் அவருடைய C அனுமதி, B அனுமதியாக மாற்றப்பட்டிருந்தது. அதாவது, அவர் தன்னுடைய குடியிருப்பு உரிமைகளை இழந்துவிட்டிருந்தார்.
image – thelocal
ஆக, எத்தகைய சூழ்நிலைகள் வெளிநாட்டவர் ஒருவரை சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற்ற வழிவகை செய்கின்றன?
2017ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்து, தீவிர குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வழிவகை செய்யும் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது.
இந்த தீவிர குற்றங்கள் எவை என்றால், கொலை, வன்புணர்வு, மோசமான பாலியல் தாக்குதல், வன்முறைச் செயல்கள், ஆயுதத்துடன் கொள்ளை மற்றும் போதைப்பொருட்கள் மற்றும் மனிதக் கடத்தல் ஆகியவை ஆகும்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த தீவிரக் குற்றங்கள் என்னும் பட்டியலில், அரசு உதவியை தவறாகப் பயன்படுத்துதல் என்னும் விடயமும் சேர்க்கப்பட்டுள்ளதுதான்.
அதாவது, நீங்கள் ஒரு வெளிநாட்டவராக இருந்துகொண்டு, உங்கள் தேவைக்காக மகளுடைய வரிப்பணத்தை சார்ந்திருப்பதை சுவிட்சர்லாந்து விரும்பவில்லை. சுவிட்சர்லாந்தில் இருந்தால் வேலை செய்யுங்கள், அரசின் உதவியை எதிர்பார்க்காதீர்கள் என்னும் மன நிலை சில சுவிஸ் நாட்டவர்களுக்கு உள்ளது.