சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை முதலே ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்தனர். ஐயப்ப பக்தர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். 41 நாள்கள் விரதத்தை மேற்கொள்ள ஏதுவாக கார்த்திகை முதல் நாளிலேயே பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். இதேபோன்று சென்னை எம்.ஆர். நகர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலிலும் பக்தர்கள் ஆர்வமும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கொரானா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் சபரிமலை சென்று வருவதில் சிரமம் இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி இருப்பதால் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் ஆர்வமும் ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்து வருகின்றனர். இதேபோன்று கார்த்திகை மாதத்தையொட்டி பூஜை பொருள் விற்பனை செய்யும் கடைகளிலும் கூட்டம் அலை மோதியது. துளசி மாலை, வேட்டி உள்ளிட்ட பூஜை பொருள்கள் வங்க பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.
கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள். சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM