வாஷிங்டன்: டெஸ்லா, ஸ்பேஸ், எக்ஸ், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்களின் தலைவரான எலான் மஸ்க், தான் எந்த நிறுவனத்திற்கும் சி.இ.ஓவாக (தலைமை நிர்வாக அதிகாரி) இருக்க விரும்பவில்லை என்று நீதிமன்ற விசாரணையின் போது, அவர் கூறியிருப்பது பல்வேறு தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்லா பங்குதாரர் ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா என்பவர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தார். 2018ல், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி(எலான் மஸ்க்) வழங்கிய இழப்பீடு தொகை அளவுக்கு அதிகமாக இருப்பதாக, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் எலான் மஸ்க் கோர்ட்டில் ஆஜராகினார். அப்போது எலான் மஸ்க் நீதிமன்றத்தில் கூறியவதாவது: எந்த நிறுனவத்திற்கும் சி.இ.ஓவாக (தலைமை நிர்வாக அதிகாரி) இருக்க நான் உண்மையாகவே விரும்பவில்லை.
டுவிட்டரிலும் எனது பங்களிப்பை குறைக்க வேண்டும் என்று எதிபார்த்துக் கொண்டிருப்பதாகவும், டுவிட்டரில் தற்காலிக ஏற்பாடுதான் செய்யப்பட்டு இருக்கிறது. டுவிட்டரை நடத்துவதற்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார்.
நடப்பு வாரத்தில் அமைப்பு ரீதியாக முழுமையான மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று நம்புவதாகவும் கூறியதாக கூறப்படுகிறது. இது பல்வேறு தரப்பினரிடம் அதிருப்தியையும், பெரும் எதிர்பார்பையும் எற்படுத்தியுள்ளது.
முன்னதாக எலான் மஸ்க் இணையதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: டுவிட்டர் நிறுவனத்தில் தனது முழு நேரத்தையும் செலவிடுவதாகவும் நிறுவனத்தின் பிரச்சினைகளை சரி செய்யும் வரை இது தொடரும் என்று பதிவிட்டுயிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement